டிரம்ப் மோசடி வழக்கு... ஆதாரம் இருக்கு... இனி தப்ப முடியாது..? நீதிபதி அதிரடி | Donald Trump

x

வங்கிகளிடம் இருந்து பெரும் தொகைகளை கடன் பெற, போலி கணக்குகளை சமர்பித்ததாக டிரம்ப் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது மோசடி வழக்கு ஒன்று கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டது. சொத்து மதிப்பை 16,000 கோடி ரூபாய் அளவுக்கு போலி ஆவணங்கள் மூலம் மிகைப்படுத்தி காட்டி, பெரும் தொகைகளை கடனாக பெற்றதாக, நியூயார்க் மாநில வழக்கறிஞர் டிரம்ப் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறபித்த நீதிபதி ஆர்த்தர் என்கோரன், டிரம்ப் மோசடி செய்துள்ளதற்கு போதுமான ஆதாரம் உள்ளதாக

கூறியுள்ளார். டிரம்ப் மீது 2,100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கவும் நியூயார்க் மாநிலத்தில் தொழில் செய்ய தடையும் விதிக்க இந்த வழக்கில் கோரப்பட்டுள்ளது. இதன் விளைவாக டிரம்பிற்கு அரசியல் மற்றும் சட்ட சிக்கல்கள் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. நான்கு குற்ற வழக்குகளும் டிரம்ப் மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்