எச்சரிக்கும் ஹவுதி இயக்கத்தின் தலைவர் அப்துல் மாலிக்.. செங்கடலில் அடுத்து நடக்கப்போவது என்ன?

x

காசா மீதான இஸ்ரேல் படையெடுப்பிற்கு எதிராக பாலஸ்தீனியர்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் கடந்த நவம்பரில் இருந்து செங்கடலில் இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் வர்த்தக கப்பல்களுக்கு எதிராக ஹவுதி போராளிகள் பலமுறை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளனர்... அவர்களின் செங்கடல் தாக்குதல்கள் உலகளாவிய கப்பல் போக்குவரத்தை சீர்குலைத்துள்ளது... இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த மாதம் ஏமனில் உள்ள ஹவுதி போராளிகளைக் குறிவைத்து அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்கத் துவங்கின... இந்நிலையில், சற்றும் எதிர்பாராத ராணுவ நடவடிக்கைகளை செங்கடலில் மேற்கொள்ள உள்ளதாக ஹவுதி தலைவர் எச்சரித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்