சர்வதேச சமையல் - ukoy.. நம்ம வீட்டு கிச்சனில் ஃபாரின் ரெசிபி..

x

எப்பேர்பட்ட குளிர்காலத்தையும் தாங்குற நம்மால....இந்த கோடை காலத்த மட்டும் தாங்கவே முடியாதுங்க...

ஒரு கடகன்னிக்கு போக முடியாது.... வேல வெட்டிக்கு போக முடியாது.... வெளிய கால எடுத்து வச்சாலே, சூரியன் சுள்ளுனு குத்த... ஒடம்பெல்லாம் வேர்த்து கொட்ட... ஆஞ்சி ஓஞ்சி, தீஞ்சி மூஞ்சி காஞ்சி கருவாடா ஆயிடும்...

ப்ரீத்....என்னா வெயிலு....கூலிங் கிளாஸ் போடலனா ரண்டு கண்ணு அவுஞ்சிடும்...வடிவேலு டயலாக்...

இந்த சுட்டெரிக்கும் சூரியனுக்கு பயந்தே நம்மோட வீக் எண்ட் வேஸ்ட் எண்டா போயிடும்... அப்படி போக கூடாதுனு தான் ஒரு அட்டகாசமான ஐட்டத்த நம்ம சர்வதேச சமையல்ல இன்னிக்கு கொண்டு வந்திருக்கோம்...

என்னடா அது... அப்டினு நீங்க எல்லாம் ஆர்வமா காத்துட்டு இருக்கறது எனக்கு புரியுது.... இதோ உங்களுக்காக....

அந்த அற்புதமான மகத்துவமான டிஷ்ஷோட பேரு UKOY... அட இது கெட்ட வார்த்த இல்லைங்க... பயப்படாதீங்க... இது ஒரு ஃபேமசான பிலிப்பினோ ரெசிபி...

என்னடா பக்குறதுக்கு நம்ம ஊரு வெங்காய வட மாதிரியே இருக்குனு தப்பா நெனைக்க வேண்டாம்... இது வெங்காய வட இல்லை...

இது இறால வச்சி செய்யுற அட்டகாசமான ஒரு ரெசிபி.... வாங்க செஞ்சி பாத்துடுவோம்....

முதல்ல இந்த UKOY செய்றதுக்கு தேவையான பொருட்கள பாத்துடலாம்.

சின்ன சைஸ் இறால் அரை கிலோ...

கோழி முட்ட 2...

பெரிய வெங்காயம் ஒன்னு....

கேரட்டு ஒன்னு...

சக்கர வள்ளி கிழங்கு ஒன்னு...

கான்ப்ளார் மாவு- ஒரு கப்பு...

கொத்தமள்ளி ஒரு கட்டு...

மிளகு துள் 4 ஸ்பூன்...

அப்றம் எண்ணெய் தேவையான அளவு...

உப்பு தேவையான அளவு....

அவ்ளோ தாங்க வேணும்... எல்லாத்தையும் எடுத்துக்கோங்க..... சமையல ஸ்டார்ட் பண்ணலாம்...

உங்க எல்லாருக்கும் வட எப்படி செய்றதுனு நல்லாவே தெரிஞ்சி இருக்கும்... அதே ஸ்டைல்ல இந்த UKOY - ரெசிபியையும் செய்யபோறோம்...

முதல்ல ஒரு பாத்திரத்த எடுத்து ரண்டு முட்டைய அதுல ஒடச்சி ஊத்திகோங்க... அப்றம் அதுல கொஞ்சம் தண்ணிய ஊத்தி நல்லா மிக்ஸ் பன்ணிக்கோங்க... அது கூட வெங்காயம், கேரட்டு, சக்கர வள்ளி கிழங்கு இது மூனையும் கட் பண்ணி போடாம, சின்ன சின்னதான் சீவி போடுங்க...

அப்டியே அத நல்லா மிக்ஸ் பண்ணிட்டு, கான்ப்ளார் மாவ அதுகூட சேர்த்து கலந்துக்கோங்க.

இது கூடவே கொத்தமல்லி இலைய துண்டு துண்டா நறுக்கி சேர்த்துடுங்க...

அப்றம் உங்களுக்கு தேவையான அளவு உப்பும், பெப்பர் பொடியையும் போட்டு நல்லா வட தட்டுற பதத்துக்கு பெசஞ்சி எடுத்துகோங்க...

அப்டியே அது ஒரு 5 நிமிஷம் இருக்கட்டும்.. அதுக்குள்ள இன்னொரு பக்கம் கடாய வச்சி எண்ணெய ஊத்திடுங்க... எண்ணெய் சூடானதும் கலந்து வச்சி இருக்க கலவையே அப்படியே வட மாதிரி தட்டி கடாய்ல போட வேண்டியது தான்.

நீங்க அப்டியே கரண்டில வைச்சி போட்டாலும் சரி.... இல்ல வாழ இலையில வச்சி தட்டி போட்டாலும் சரி... ஆனா இப்படி மட்டு தட்டிடாதிங்க... அப்றம் வாய்லயே வைக்க முடியாது.

சும்மா... ஒரு ஃபன்னுக்கு சொன்னேன்... பயப்பாடாதீங்க...

தட்டி போட்டதெல்லாம் அப்டியே பொன்னிறமா வெந்து வந்ததும், எடுத்து தட்டுல வச்சி பரிமாற வேண்டியது தான்...

அவ்ளோ தான் UKOY ரெடி... அப்டியே மொறு மொறுனு இருக்குற அந்த UKOY-அ எடுத்து டொமேடோ சாஸ்லயோ, மயோனைஸ்லயோ தொட்டு சாப்டலாம்...

ஆனா இதுக்கு வெளி நாட்டுகாரங்க வினிகர்ல செய்யுற ஒரு விதமான சாஸ பயன்படுத்துறாங்க... உங்களுக்கு அப்டி எதும் கஸ்டமா இருந்தா நீங்க சட்னிய கூட வச்சிக்களாம்.

என்ன நாக்கு துடிக்குதா...? வாங்க சாப்டு பாத்துடலாம்....

ஆஹா...என்ன சுவை...என்ன சுவை....அற்புதமா இருக்குல.....

UKOY செய்யுங்க...உற்சாகமா சாப்டுங்க....வீக் எண்ட கொண்டாடுங்க....


Next Story

மேலும் செய்திகள்