தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் காலமானார்

x

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற முன்னாள் ஆல் ரவுண்டர் மைக் ப்ரொக்டெர் தனது 77வது வயதில் காலமானார். ப்ரொக்டெரின் மனைவி இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இதய அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து மைக் ப்ரொக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிமையான வேகப்பந்து வீச்சாளரான பைக் ப்ரொக்டெர் 1965 முதல் 1988 வரை 401 முதல் தர போட்டிகளில் விளையாடி, ஆயிரத்து 417 விக்கெட்டுகளை வீழ்த்தி, 21 ஆயிரத்து 936 ரன்கள் எடுத்துள்ளார். மைக் ப்ரொக்டெர் மறைவுக்கு ரசிகர்களும், கிரிக்கெட் நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்