சத்யஜித்ரே விருது வாங்கும் பிரபல ஹாலிவுட் நடிகர்

x

கோவாவின் 54 வது சர்வதேச திரைப்பட விழாவில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸுக்கு சத்யஜித் ரே சிறந்த வாழ்நாள் விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், எக்ஸ் வலைத்தளத்தில்,

தெற்காசியாவின் மிக முக்கியமான திரைப்பட விழாவிற்கு அவரை, கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ் மற்றும் அவரது மகனை வரவேற்க ஆவலுடன் காத்திருப்பதாக கூறியுள்ளார். 54 ஆவது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்