ரஷ்யாவின் அடிமடியில் கை வைத்த போர்.. கெஞ்சாத குறையாக கேட்கும் புதின்

x

ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனில் ரஷ்யா போர் துவங்கியதில் இருந்து பல்லாயிரக்கணக்கான வீரர்களை இழந்துள்ளது... மேலும் லட்சக்கணக்கான மக்கள் போருக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் தாங்களும் போருக்கு அழைக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.. இந்நிலையில், ரஷ்யர்கள் தங்கள் அடையாளங்களை பாதுகாக்க குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 2 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்... சோவியத் ஒன்றியத்தின் சரிவைத் தொடர்ந்து ரஷ்யா 2 தசாப்தங்களாக படிப்படியாக மக்கள் தொகை வீழ்ச்சியை சந்தித்துள்ளது... 20 ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட 14 கோடியே 90 லட்சமாக இருந்த மக்கள் தொகை, 2023ன் துவக்கத்தில் 14 கோடியே 64 லட்சமாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்