"ரஷ்யர்களின் பாதுகாப்பே முதன்மையான இலக்கு"..மீண்டும் வாகைசூடிய புதின்

x

ரஷ்யாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 88 சதவீத வாக்குகள் பெற்று, புதின் மீண்டும் வெற்றி பெற்றார். தொடர்ந்து இன்று அதிபராக பதவியேற்ற அவர், நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், ரஷ்யர்களின் பாதுகாப்பே தனது முதன்மையான இலக்கு என்று அவர் உறுதியளித்தார். 1999-ல் இடைக்கால அதிபராக பதவியேற்ற புதின், 2007-ஆம் ஆண்டில் அதிபராக முதல் முறையாக பெறுப்பேற்றார். பின்னர் மீண்டும் 2012-ல் இருந்து அதிபராக பொறுப்பு வகிக்கும் அவர், தற்போது 5வது முறையாக பதவியேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்