ரஷ்ய அதிபர் தேர்தல்.. வீட்டிற்கே வந்த வாக்கு பெட்டிகள்

x

ரஷ்ய அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் நகரில் நடைபெற்றது... மார்ச் 15-17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் நிலையில், அன்றைய தினங்களில் வாக்குச் சாவடிக்குச் செல்வதற்குப் பதிலாக, தேர்தல் ஆணைய ஊழியர்கள் வீடு வீடாக நடந்து சென்று டொன்ட்ஸ்க் பகுதியில் வசிக்கும் மக்களிடம் வாக்குப்பதிவு செய்தனர்... ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், ஜப்போரிஜியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்களிலும் ரஷ்ய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என கடந்த ஆண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போதே தெரிவிக்கப்பட்டிருந்தது... அதன்படி டொனெட்ஸ்க்கில் தேர்தல் துவங்கியது...


Next Story

மேலும் செய்திகள்