3 லட்சம் வீரர்களை காவு வாங்கிய போர் - ரஷ்ய மக்களுக்கு புதின் போட்ட கன்டிஷன்

x

உலகிலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நாடு ரஷ்யா.

1 கோடியே 70 லட்சத்து 98 ஆயிரத்து 242 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ரஷ்யாவில், மக்கள்தொகை14 .3 கோடியாக உள்ளது.

ரஷ்யாவில்1990களில் மக்கள்தொகை 14.8 கோடியாக இருந்த நிலையில், 2000த்தில் சரிவை நோக்கி நகர்ந்தது. கடந்த இரு தசாப்தங்களாக இந்நிலையே நீடிக்கிறது.

இதற்கிடையில் கடந்த இரண்டு வருடங்களாக ரஷ்யா உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ள நிலையில், இறப்புகளும் அதிகரித்து வருகின்றன.

உக்ரைனுடனான போரில், 3 லட்சம் வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போருக்கு அழைப்பு விடுக்கப்போகிறார்கள் என்ற பயத்திலும் பலர் நாட்டை விட்டே வெளியேறி வருகின்றனர்.

இதே நிலை நீடித்தால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கும் என்பதால், ரஷ்யாவில் உள்ள தம்பதிகள் 8 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என கடந்த டிசம்பர் மாதம் கூறியிருந்தார் அதிபர் புதின்.

ரஷ்யாவில் இதற்கு முந்தைய தலைமுறையினர் அதிகளவில் குழந்தைகளை பெற்று வளமுடன் இருந்ததாகவும், அந்த மரபை காத்து பெரிய குடும்பங்களாக வாழ வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

ரஷ்யாவின் மக்கள் தொகையை காப்பதும், அதிகரிப்பதும் தான் நாட்டின் இலக்கு எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து மீண்டும் வலியுறுத்தியுள்ள புதின்,

ரஷ்ய மக்கள் தங்கள் அடையாளங்களை தற்காத்து கொள்ள, குறைந்தது 2 பிள்ளைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், ஒரு குடும்பத்திற்கு ஒரே ஒரு குழந்தை பெற்றுக்கொள்வது மக்கள் தொகையை குறைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போரினால் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி பேசிய அவர், அதிகளவில் மக்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மக்கள் தொகை அதிகரிப்பு குறித்து ரஷ்ய அதிபரின் பேச்சு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்