அணு ஆயுத போர்.. ரெட் பட்டனில் விரல்.. பகிரங்கமாக அறிவித்த புதின்.. மிரளும் உலகம்

x

மேற்குலகைத் தாக்கும் ஆயுதங்கள் ரஷ்யாவிடம் இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்திருந்த நிலையில், ரஷ்யா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தத் தயாராவதற்கான எவ்வித அறிகுறியும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்... மேற்கத்திய நாடுகள் உக்ரைன் போருக்கு வீரர்களை அனுப்பினால் அணு ஆயுத போர் மூளும் அபாயம் எழும் என புதின் நேற்று எச்சரித்திருந்தார்... மேலும் மேற்குலகைத் தாக்கும் ஆயுதங்கள் தங்களிடம் இருப்பதாகவும் மிரட்டல் விடுத்தார். இந்த சூழலில் தான் மில்லர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்... மேலும் தொடர்ந்து ரஷ்யாவை அமெரிக்கா கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்