ரஷ்யாவுக்கு எதிராக கூர் தீட்டும் பைடன் - போர் தீயை மூட்டிய அமெரிக்க முடிவு

x

உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு 11,800 கோடி டாலர்

நிதி உதவி அளிக்க அமெரிக்க செனட் சபை முடிவு செய்துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

போர்களத்தில் உள்ள உக்ரைன் மற்றும் இஸ்ரேல் அரசுகளுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை அமெரிக்கா அளித்து வருகிறது.

இதன் மூலம் ரஷ்யாவிற்கு எதிரான போரை

உக்ரைனும், ஹமாஸுக்கு எதிரான போரை இஸ்ரேலும்

வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றன.

கடந்த அக்டோபரில் உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு

10,500 கோடி டாலர் நிதி உதவி அளிக்கும் திட்டத்தை

ஜோ பைடன் முன்மொழிந்தார். ஆனால் இதற்கான

மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில்

நிறைவேற்ற முடியாமல், சிக்கல் ஏற்பட்டது.

அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக இடம் பெயர்பவர்களை தடுக்க, அமெரிக்க எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என்று பெரும்பாலன செனட் சபை உறுப்பினர்கள், கட்சி பேதமின்றி வலியுறுத்தினர். இதற்கு ஒப்புக் கொண்டால், உக்ரைன், இஸ்ரேலுக்கு நிதி உதவி அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற தாங்கள் உதவுவதாக உறுதியளித்தனர்.

கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்ற தொடர் விவாதங்கள், மற்றும் சமரச பேச்சு வார்த்தைகளின் விளைவாக, 11,800 கோடி டாலர் நிதியை ஒதுக்க இரு தரப்பு செனட் சபை உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர். இதற்கான வாக்கெடுப்பு புதன் கிழமை நடைபெற உள்ளது.

அதன்படி, உக்ரைனிற்கு 6,010 கோடி டாலர் நிதி உதவியும், இஸ்ரேலுக்கு 1,410 கோடி டாலர் நிதி உதவியும், அமெரிக்க எல்லைப் பாதுகாப்பிற்கு 2020 கோடி டாலர் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

ஆனால், செனட் சபையில் நிறைவேற உள்ள இந்த மசோதா, பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்படுவதில் கடும் எதிர்ப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு எதிர்கட்சியான குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்