புதின் கொடுத்த பெரும் ஷாக்..! பரபரப்பில் ரஷ்யா... மிரட்சியில் மேற்குலகம்

x

ரஷ்ய அதிபர் புதின், தனது நீண்ட நாள் நண்பரான செர்ஜி ஷோய்குவை, ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்துள்ளது உலக அரங்கில் கவனம் பெற்றுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தொடரும் நிலையில், 5வது முறையாக ரஷ்ய அதிபராக புதின் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு முதல் ரஷ்யாவின் சக்தி வாய்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த செர்ஜி ஷோய்குவை பதவியில் இருந்து நீக்கி விட்டு, அவருக்கு ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் பொறுப்பை கொடுத்துள்ளார். மேலும் இவருக்கு பதிலாக, ரஷ்யாவின் முன்னாள் துணை பிரதமரும், பொருளாதார வல்லுனருமான ஆண்ட்ரூ பொலோசோவை பாதுகாப்பு அமைச்சராக நியமித்துள்ளார். ரஷ்யாவின் வருமானத்தில் பெரும்பாலும் ராணுவத்திற்கே செலவு செய்யப்படுவதால், அதனை கவனிப்பதற்கு ஏற்ப பொருளாதார வல்லுநரை மாற்றியமைத்துள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்