சொந்த அமைச்சருக்கே கட்டம் கட்டிய புதின்.. மிரளவிட்ட ரஷ்யா

x

லஞ்ச புகாரில், ரஷ்ய துணை பாதுகாப்பு அமைச்சர் திமூர் இவானோ கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவில் புதினின் ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே, உக்ரைனுடன் போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் பாதுகாப்பு துணை அமைச்சர் திமூர் வாடிமோவிச் இவானோவ் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்தின் தன்மையை பொறுத்து அவருக்கு பெரிய அளவிலான அபராதம் அல்லது 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்