ரஷ்யா ராணுவ தின விழா கொண்டாட்டம் - கொட்டும் பனியில் அணி வகுத்து சென்ற வீரர்கள்

x

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ராணுவ தின விழாவில் அந்நாட்டு அதிபர் புதின் கலந்து கொண்டார். போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் நினைவாக வைக்கப்பட்டிருந்த மலர் வளைய உருவத்திற்கு அதிபர் புதின் மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ராணுவ அதிகாரிகளுடன் கைகுலுக்கிய அதிபர் புதின் கொட்டும் பனியில் நடைபெற்ற ராணுவ வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

ராணுவ தினவிழாவில் பேசிய அதிபர் புதின் ரஷ்யாவிடம் உள்ள அணு ஆயுதங்களில் 95 சதவீதம் நவீனமயமாக்கப்பட்டுள்ளதாக கூறினார். அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் 4 அதி நவீன சூப்பர்சோனிக் போர் விமானங்கள் அண்மையில் விமானப்படையில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். உக்ரைன் போரில் வீரமரணமடைந்த ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு புகழாரம் சூட்டிய அதிபர் புதின் , அவர்கள் உண்மை நீதிக்காக போரிட்ட ஹீரோக்கள் என்று குறிப்பிட்டார் . ராணுவதினத்தையொட்டி மாஸ்கோ நகரில் இரவில் வண்ணமிகு வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்