8 இந்தியர்கள் மேல் தொங்கிய தூக்கு கயிறு.. முடிவை மாற்றிய கத்தார் மன்னர் - ராஜதந்திரத்தால் சாதித்து காட்டிய இந்தியா

x

கத்தாரில் அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில், இந்திய கடற்படை முன்னாள் வீர‌ர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். அவர்கள், கத்தாரில் உளவு பார்த்ததாக கூறி கடந்த ஆண்டு கத்தார் அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கத்தார் நீதிமன்றம், 8 பேருக்கும் மரண தண்டனை அறிவித்த‌து. இதையடுத்து, இந்திய அரசு தொடர் பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத் தொடர்ந்து, 8 பேரின் மரண தண்டனை, சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறையின் தொடர் பேச்சுவார்த்தையின் பலனாக, 8 பேரையும் கத்தார் அரசு விடுவித்துள்ளது. இந்த முடிவை வரவேற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், 8 பேரில் 7 பேர் இந்தியா வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியர்களை விடுவிப்பதற்கும், வீட்டுக்கு அனுப்பவும் கத்தார் மன்னர் எடுத்த முடிவை பாராட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்