விண்ணில் அணுஆயுத தாக்குதல்... ரெட் பட்டனில் புதினின் `கை' - மொத்த உலகிற்கும் பெரும் அபாயம்

x

ரஷ்யா விண்ணில் உள்ள செயற்கைக்கோள்களைக் குறி வைக்கும் வல்லமையை அதிகரித்து வருவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு தகவல் தொடர்பு ஆலோசகர் ஜான் கிர்பி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்...

ரஷ்யா விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களை முடக்க அல்லது அழிக்க விண்வெளி அடிப்படையிலான அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் ஜான் கிர்பி இவ்வாறு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... ரஷ்யாவின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாக கிர்பி குறிப்பிட்டுள்ளார். மேலும் இதனால் உடனடி பாதிப்பு எதுவுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அணு ஆயுதமா என்பது தொடர்பான கேள்விக்கு, "இப்போதைக்கு வேறு விவரங்கள் எதையும் தன்னால் சொல்ல முடியாது" என்று கிர்பி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்