மீண்டும் அதிர வைத்த வட கொரியா - சுக்குநூறான தீவு.. மகிழ்ச்சியில் கிம் ஜாங் உன்

x

மீண்டும் அதிர வைத்த வட கொரியா - சுக்குநூறான தீவு.. மகிழ்ச்சியில் கிம் ஜாங் உன்

வடகொரியா தங்கள் ராணுவம் ஒரே வாரத்தில் 2வது முறையாக க்ரூஸ் ரக ஏவுகணைகளை சோதனை செய்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது...புதிதாக உருவாக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் மூலம் "புல்வாசல்-3-31" என்று பெயரிடப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதை வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் மேற்பார்வையிடும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன... இந்த ஏவுகணைகள் வடகொரியாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து கடலுக்கு மேலே பறந்து இலக்காக நிர்ணயிக்கப்பட்ட பெயர் குறிப்பிடப்படாத தீவை தாக்கியுள்ளது... இதன் பறக்கும் நேரம் சுமார் 2 மணி நேரம் ஆகும்... இந்த சோதனை வெற்றி பெற்றதாக கிம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்... அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது வடகொரியாவை ஆத்திரமூட்டி வரும் நிலையில், வடகொரியா ஆயுத பலத்தை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்