43 வயதில் தனது நீண்ட கால காதலனை கரம்பிடித்த நியூசி. முன்னாள் பிரதமர்

x

நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தனது நீண்ட கால காதலரான கிளார்க் கேஃபோர்டைக் கரம் பிடித்தார்.

43 வயதான ஆர்டெர்னுக்கும், 47 வயதான கேஃபோர்ட்டுக்கும் 2019ல் நிச்சயதார்த்தம் நடந்தது... இருவரும் 2022ம் ஆண்டின் துவக்கத்தில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தனர்... ஆனால் கொரோனா தொற்று காரணங்களால் விழா ரத்து செய்யப்பட்டிருந்தது...

இந்நிலையில் ஹாக்ஸ் பேயில் திருமணம் உற்சாகமாக நடைபெற்றது... ஆர்டெர்ன் 2017 முதல் கடந்த ஆண்டு ஜனவரி வரை பிரதமராகப் பதவி வகித்தார்... பாராளுமன்றத்தில் தனது இறுதி உரையில், நியூசிலாந்து தொலைக்காட்சி தொகுப்பாளரான கேஃபோர்டிடம், "நாம் திருமணம் செய்து கொள்வோம்" என கூறியிருந்தார்... இத்தம்பதிக்கு 5 வயதில் மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்