நண்பனின் கொலைக்கு காரணமான காவலர் தப்பியதால் கொதித்தெழுந்த சக மாணவர்கள்... மெக்சிகோவில் பறந்த தீ

x

மெக்சிகோவில் கடந்த 2014-ம் ஆண்டில் 43 மாணவர்கள் காணாமல் போனதாகவும், இந்த விவகாரத்தில் நீதி கோரி மாணவர்கள் குழு ஒன்று கடந்த வாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது, போலீசார் மாணவர்கள் சென்ற வாகனங்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தெற்கு மாநிலமான குரேரோவில் உள்ள அயோட்சினாபா பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து வாகனங்களை அடித்து நொறுக்கி தாக்குதலில் ஈடுபட்டதுடன், 10-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்