இது இல்லனா அது..."யூ டர்ன்" அடித்த இந்திய வம்சாவளி அமெரிக்க அதிபர் பதவி ட்விஸ்ட்

x

அமெரிக்க அதிபராகப் போட்டியிட வாய்ப்பு

துணை அதிபராகப் போட்டியிடப் போவதாக இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்...

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பாக பைடனும், குடியரசுக் கட்சி சார்பாக ட்ரம்பும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே விருப்பம் தெரிவித்த நிலையில், அடுத்ததாக விவேக் ராமசாமியும் தான் போட்டியிடப் போவதை உறுதி செய்தார். சமீப காலமாக தனது வசீகர பேச்சாலும், வித்தியாசமான சிந்தனையாலும் அனைவரையும் கவர்ந்து வந்தார்... ஆனால், அடுத்தடுத்த வழக்குகளை சந்தித்து வரும் ட்ரம்பிற்கு ஆதரவும் புகழும் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், ட்ரம்ப் அதிபராகப் போட்டியிட்டால் தான் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட உள்ளதாக சூசகமாகத் தெரிவித்துள்ளார். விவேக் ராமசாமியின் இந்த கருத்து, 2024 அதிபர் தேர்தலில் இருவரும் இணைந்து போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக பரவிய வதந்தியை உறுதிப்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்