இஸ்ரேலின் கோர தாக்குதல் - மண்ணில் சரிந்த ஹமாஸ் தலைவரின் 3 மகன்கள்

x

காசாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானியேவின் 3 மகன்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்மாயில் ஹானியேவின் மகன்கள் அகதிகள் முகாம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஹானியேவின் மகன்கள் ஹாசேம், ஆமீர் மற்றும் முகமது ஆகிய 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும், ஹானியேவின் 4 பேரக்குழந்தைகளும் இந்த தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹானியேவும் உறுதி செய்துள்ளார். பாலஸ்தீன தலைவர்களின் குடும்பத்தினரை இஸ்ரேல் ராணுவம் குறிவைத்து தாக்கினாலும் அவர்கள் ஒருபோதும் பின்வாங்கமாட்டார்கள் என்றும், இந்த படுகொலைகளால் போர் நிறுத்த பேச்சுவார்த்தையின்போது ஹமாஸ் அமைப்பின் கோரிக்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் ஹானியே தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்