இஸ்ரேலுக்கு கிடைத்த ரகசிய தகவல்.. காசாவிலிருந்து வந்த பகீர் காட்சி

x

காசா மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலிய ராணுவத்தினர் கான் யூனிஸ் பகுதியில் உள்ள நாசர் மருத்துவமனை மீது வான் வழி தாக்குதல் நடத்தினர். இதில் கட்டிட மேற்கூரை இடிந்து சேதமடைந்தது. மருத்துவமனைக்குள் இருந்த பலர் படுகாயமடைந்தனர். நோயாளிகள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினர் மருத்துவமனைக்குள் ஊடுருவி உள்ளதாகவும், அங்கு இஸ்ரேல் பிணைக்கைதிகளை மறைத்து வைத்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனைஹமாஸ் மறுத்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலிய சிறப்பு ராணுவப்படையினர் மருத்துவமனைக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து காசா மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்