நட்பு நாடுகளை உதாசீனப்படுத்திய இஸ்ரேல்.. வெடிக்கும் அடுத்த போர்.. உக்ரைனில் 17 பேரை கொன்ற ரஷ்யா

x

#israeliranwar #netanyahu

ஈரான் - இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ள தனது சொந்த முடிவைத் தானே எடுக்கும் என அந்நாட்டு அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்...

Vovt

சிரிய தலைநகர் டமாஸ்கசில் ஈரானின் துணைத் தூதரகத்தைக் குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மழை பொழிந்தது... இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் எதிர்வினை ஆற்றினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரானின் உயர் தலைவர் இப்ராஹிம் ரைசி எச்சரித்திருந்தார்... ஈரான் மீது எதிர்த் தாக்குதல் நடத்த வேண்டாம் எனவும், பொறுமையைக் கடைப்பிடிக்குமாறும் இஸ்ரேலுக்கு அதன் நட்பு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன... இந்நிலையில், இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ள தனது சொந்த முடிவுகளைத் தானே எடுக்கும் என நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்