இஸ்ரேல் விரைந்த அமெரிக்க அதிபர் -"எகிப்து வழியாக 20 லாரிகள்..." - வெளியான பரபரப்பு தகவல்

x

காசா பகுதிக்கு மனிதாபிமான உதவி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு, ரஃபா பாதையை திறக்க எகிப்து அதிபர் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போர் மூண்ட நிலையில், இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம் மேற்கொண்டார். எனினும், காசா மருத்துவமனையின் மீதான தாக்குதல் காரணமாக, ஜோர்டான், எகிப்து மற்றும் பாலஸ்தீன தலைவர்களுடன் அவர் நடத்த இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதனிடையே, எகிப்து எல்லை வழியாக காசா பகுதிக்கு மனிதாபிமான பொருட்களை 20 லாரிகளில் எடுத்துச் செல்வதற்கு, அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசி ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்