இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய முன்னாள் ராணுவ வீரர்.. சோகத்தில் வெளியான செய்தி

x

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கார்னல் வைபவ் அனில் காலே என்பவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். பின்னர் அவர் ஐநா சபையின் பாதுகாப்பு சேவைகள் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக பணியில் சேர்ந்தார். அவர் அண்மையில் காசாவில் உள்ள ராஃபா பகுதியில் ஐநா வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் கார்னல் வைபவ் அனில் காலேவின் மரணம் வருத்தம் அளிப்பதாகவும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது உடலை மீட்டு கொண்டு வர இந்திய தூதரக அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்