முடிவுக்கு வரும் இஸ்ரேல்-காஸா போர்..! பாலை வார்த்த பைடன் | Israel

x

ரமலான் நேரத்தில் இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்...

Vovt

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் போது செய்தியாளர்களை சந்தித்த அவர், மார்ச் 10ம் தேதி தொடங்கும் இஸ்லாமிய நோன்பு மாதமான ரமலான் சமயத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என குறிப்பிட்டார்... மேலும் அதற்காக தாங்கள் கடினமாக உழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், அமெரிக்கா வரும் நாட்களில் வான்வழியாக காசாவில் உள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் என குறிப்பிட்ட பைடன் அதுகுறித்த முழு விவரங்களைத் தெரிவிக்கவில்லை... ஜோர்டான் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகள் ஏற்கனவே காசாவிற்குள் வான்வழி உதவிகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்