கார் விபத்தில் சிக்கிய இஸ்ரேல் அமைச்சர் - அதிர்ச்சி காட்சிகள்

x

கார் விபத்தில் சிக்கிய இஸ்ரேல் அமைச்சர் - அதிர்ச்சி காட்சிகள்

இஸ்ரேலில் நிகழ்ந்த கார் விபத்தில் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் இடமர் பென்-க்விர் காயமடைந்தார். டெல் அவிவ் நகருக்கு அருகே அவர் காரில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில்

இடமர் பென்-க்விர் காயமடைந்ததாகவும் அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஒரு பெண் உள்ளிட்ட 2 பேர் படுகாயமடைந்ததாக தெரிவித்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்