உலகமே பயந்த ஒரு தாக்குதல் ஆரம்பம்.. 3ம் உலகப்போராகிறதா? - இந்தியர்களுக்கு உச்சபட்ச எச்சரிக்கை

x

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை செலுத்தி வான்வழி தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காசா மீது போர் தொடுத்து பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த இஸ்ரேலிய ராணுவம் இரு வாரங்களுக்கு முன்பு சிரியா தலைநகர் டமாஸ்கஸ்சில் உள்ள ஈரான் தூதரகம் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சி படையை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இஸ்ரேல் மீது ஈரான், எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்று அண்மையில் அமெரிக்கா எச்சரித்து இருந்தது. இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை செலுத்தி வான்வழி தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதிப்படுத்தியுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஈரானின் தாக்குதலை தடுக்க

அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அரசுக்கு எதிராக டெல் அவிவ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டஆயிரக்கணக்கானோர் ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு அஞ்சி கலைந்து சென்றனர். இதனிடையே இஸ்ரேல் மீதான ஈரான்

தாக்குதல் காரணமாக பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஜோர்டான், ஈராக் நாடுகளின் விமான நிலையங்கள் உடனடியாக முடப்பட்டுள்ளன. இஸ்ரேல் மீதான தாக்குதலில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க அமெரிக்க அதிபர் பைடன் உடனடியாக வாஷிங்டன் விரைந்தார். இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என இந்திய மக்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இதனிடையே

ஈரானின் ஏவுகணைகள் ஜெருசலேம் நகரை தாக்க தொடங்கியுள்ளன. இதனால் அங்கு பொதுமக்களை எச்சரிக்கும் சைரன் சத்தம் ஒலிப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்