ஈரான் சிறைபிடித்த கப்பலில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய பெண் பணியாளர்-வெளியுறவுத்துறை கொடுத்தஉறுதி

x

ஈரான் சிறைபிடித்த கப்பலில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய பெண் பணியாளர் - வெளியுறவுத்துறை கொடுத்த உறுதி

#iran | #india | #kerala | #thanthitv

ஈரானால் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் இருந்த இந்திய பெண் ஒருவர் பத்திரமாக வீடு திரும்பியுள்ளார். கடந்த வாரம் ஈரான் ராணுவம் சரக்கு கப்பல் ஒன்றை சிறை பிடித்த‌து. கப்பலில் 17 இந்திய மாலுமிகள் இருந்த‌தால், உறவினர்கள் அச்சமடைந்தனர். இந்தியர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்களில் ஒருவரான கேரளாவை சேர்ந்த ஆன் டெசா ஜோசப் கொச்சி வந்தடைந்தார். அவரை, அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மற்ற இந்தியர்களையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்