பாஜக... கிளம்பிய திடீர் சந்தேகம்..! - கொத்தாக தூக்கி `ஷாக்' கொடுத்த சீனா-ஆட்டம் காணும் பங்குச்சந்தை

x

மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை பலம் கிடைக்குமா என்ற சந்தேகத்தினால், அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையை விட்டு வெளியேறி வருகின்றனர். ஏப்ரலில் 8 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.

மே மாதத்தில் இதுவரை மொத்தம் 28 ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

பங்கு விலைகள் மிக அதிக அளவுக்கு உயர்ந்துள்ளதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. சீனா மற்றும்

ஹாங்காங் பங்கு சந்தைகளில், பங்கு விலைகள் குறைவாக உள்ளதால், அன்னிய முதலீடுகள் இந்திய பங்கு சந்தையில்

இருந்து சீன பங்கு சந்தைக்கு மாறி வருகின்றன. மக்களவை தேர்தலில், பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை கிடைத்தால்,

இந்திய பங்கு சந்தைகளில் அன்னிய முதலீடுகள் பெரிய அளவிற்கு அதிகரிக்கும் என்று துறை சார் நிபுணர்கள் கூறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்