IND vs AFG டி20 போட்டி இன்று தொடக்கம் | T20 | IND vs AFG

x

மொகாலியில் உள்ள ஐ.எஸ்.பிந்த்ரா மைதானத்தில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. சுமார் ஓராண்டுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ள ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அணியில் இல்லாத நிலையில், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட இளம் வீரர்கள் பட்டாளத்தை ரோகித் வழிநடத்த உள்ளார். இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இப்ராஹிம் சாட்ரான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியில் முகமது நபி, முஜிபுர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஓமர்சாய் உள்ளிட்டோர் இடம்பெற்று உள்ளனர். டி20 உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு நடைபெற உள்ளதால் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்