பிரிட்டனில் மசோதா நிறைவேறும் போதே பெரும் சோகம்.. 7 வயது சிறுமி உட்பட 5 பேர் பலி..

x

பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிப்பவர்களைத் தடுக்கும் மசோதா நிறைவேற்றப்பட்ட சமயத்தில் பிரிட்டனுக்கு ஆங்கிலக் கால்வாய் மூலம் கடக்க முயன்ற 7 வயது சிறுமி உள்பட 5 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் இருந்து 112 பேருடன் படகு புறப்பட்ட நிலையில், அப்படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 7 வயது சிறுமி, ஒரு பெண் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்... மேலும் 49 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். உயிருடன் யாரும் எஞ்சியுள்ளனரா என பிரெஞ்சுக் கடலோரக் காவற்படையினர் தேடி வருகின்றனர். படகில் இருந்த 58 பேரும் தாங்கள் மீட்கப்படுவதை விரும்பவில்லை எனவும், மீண்டும் படகின் எஞ்சினை சரி செய்து பிரிட்டனுக்குச் செல்வதில் குறியாக இருந்ததாகவும் மீட்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்