நடுவானில் மோதிய 2 ஹெலிகாப்டர் - அந்தரத்திலேயே சிதறிய உடல்கள் - நடுங்க வைக்கும் வீடியோ

x

மலேசியாவில் கடற்படை ஒத்திகை நிகழ்ச்சியின்போது, நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மலேசிய கடற்படை தினத்தின் 90-ம் ஆண்டு தின நிகழ்ச்சிக்காக பெரக் பகுதியிலுள்ள ராணுவத் தளத்தில் கடற்படை ஹெலிகாப்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்டன. காலை 9 மணியளவில் லுமுட் தளத்தில் நடந்த அணிவகுப்பு பயிற்சியின்போது நடுவானில் இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடொன்று மோதி கீழே விழுந்தன. இந்த கோர விபத்தில், கடற்படை வீரர்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்