ரகசியத்தை மறைத்த ஹமாஸ்.. ஆதாரத்துடன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து காட்டிய இஸ்ரேல்

x

காசாவில் உள்ள அல் ஷிபா மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், அங்கு ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், போராளிகள் பதுங்கியிருப்பதாகவும் கூறி, இஸ்ரேல் ராணுவம் சோதனை நடத்தியது. எனவே, அங்கிருக்கும் நோயாளிகளையும் வெளியேற்றி வருகிறது. மேலும், மருத்துவமனையின் கீழ் சுரங்கம் இருப்பதாக கூறி, அதுதொடர்பான வீடியோக்களையும், படங்களையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது. ஆனால், பாலஸ்தீனத்தில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கம் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ள ஹமாஸ், மருத்துவமனை கட்டமைப்புகளின் கீழ் அத்தகைய சுரங்கம் எதுவும் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்