கழுதையின் உதவியால் உயிர் பிழைத்த சிறுவன் அவலத்தின் உச்சத்தில் காசா

x

காசாவில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி 9 நாட்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவன் மீட்கப்பட்டார்.அஹ்மத் நயிம் மற்றும் அவரது 4 உறவினர்களும் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இடிந்து போன வீட்டின் அடியில் சிக்கிக் கிடந்தனர். மேலும் 30 பேர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறுவன் நயிம் கடுமையாக நீரிழப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்பட்ட போதிலும் நல்வாய்ப்பாக உயிருடன் மீட்கப்பட்டார். அவர் பத்திரமாக மீட்கப்பட்ட போதும், காசாவில் எரிபொருள் பற்றாகுறையால் கழுதை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவேண்டிய அவலம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்