போரில் பாதித்த காசா மக்கள்.. விமானம் மூலம் வழங்கிய நிவாரண பொருட்கள்

x

ஜோர்டான் நாட்டு மன்னர் அப்துல்லா, போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதி மக்களுக்கு விமானத்திலிருந்து நிவாரண பொருட்களை வழங்கினார். போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதி மக்கள் உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இன்றி தவித்து வருகின்றனர். உலக நாடுகள் அனுப்பும் நிவாரண பொருட்களை, இஸ்ரேல் படைகள் தடுப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இதனிடையே, ஜோர்டான் மன்னர் அப்துல்லா, ராணுவ சரக்கு விமானத்தில் நேரடியாக சென்று, பாராசூட் மூலம் நிவாரண பொருட்களை, விமானத்திலிருந்து இறக்கிவிட்டார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்