வெடித்த நில பிரச்சினை.. 54 பேர் கொலை.. ஐநாவே அலறும் கோர சம்பவம்

x

சூடான் மற்றும் தெற்கு சூடான் இடையே நீடிக்கும் நிலப் பிரச்சினையால், எல்லப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 54 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சூடான் மற்றும் தெற்கு சூடான் இடையே உள்ள அபெய் என்ற பகுதியை, இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. பிரச்சினை தீர்க்கப்படாமல் இரு நாடுகளும் இணைந்து நிர்வகித்து வரும் நிலையில், எல்லைப் பகுதியில் உள்ள டொகுரா பகுதியில் உள்ள கிராமத்திற்குள் புகுந்த சிலர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், ஐ.நா. அமைதிப்படையை சேர்ந்த 2 பேர், பெண்கள் குழந்தைகள் உட்பட 54 பேர் கொல்லப்பட்டனர். 64 பேர் படுகாயங்களுடன், ஐ.நா முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்