"நாயகன் மீண்டும் வரான்..." Captain Jack Sparrow- வுக்கு அழைப்பு விடுத்த டிஸ்னி... மீண்டும் கலக்குவாரா ஜானி டெப்?

பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படத்தின் 6ஆவது பாகத்துல மீண்டும் கேப்டன் ஜேக் ஸ்பேரோவா நடிக்க ஜானி டெப்க்கு 2500 கோடி சம்பளமா தர டிஸ்னி நிறுவனம் தயாரா இருக்கறதா ஒரு தகவல் வெளியாகியிருக்கு...
x

"நாயகன் மீண்டும் வரான்..." Captain Jack Sparrow- வுக்கு அழைப்பு விடுத்த டிஸ்னி... மீண்டும் கலக்குவாரா ஜானி டெப்?

பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படத்தின் 6ஆவது பாகத்துல மீண்டும் கேப்டன் ஜேக் ஸ்பேரோவா நடிக்க ஜானி டெப்க்கு 2500 கோடி சம்பளமா தர டிஸ்னி நிறுவனம் தயாரா இருக்கறதா ஒரு தகவல் வெளியாகியிருக்கு... அவங்களே தூக்கிட்டு இப்ப அவங்களே திருப்பி ஆபர் பண்றாங்க.. இதுக்கு பின்னாடி இருக்க கதைய பாக்கலாம்...

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்... இவருக்கு அறிமுகமே தேவையில்ல... அந்தளவுக்கு ஆல் வோர்ல்டு ரசிகர்கள் மனசுல கேப்டன் ஜேக் ஸ்பேரோவா வாழ்ந்துக்கிட்டு இருக்காரு டெப்... ஆனா பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படத்தின் 6 ஆவது பாகத்துல இருந்து டெப்ப தூக்குனது, அவருக்கும் சரி, அவரது ரசிகர்களுக்கும் சரி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துச்சு... எதுக்குப்பா திடீர்னு டெப்ப தூக்குனாங்கனு பாத்தா அதுக்கு காரணமா இருந்தது ஜானி டெப்பின் முன்னாள் மனைவி அம்பர் ஹெர்ட்டு தான்.. தனது திருமண வாழ்க்கையின் போது, தன்னுடைய கணவர் அடிச்சு, கொடுமைபடுத்தியதா ஆம்பர் ஹெர்டு எழுதிய கட்டுரை பெரும் அதிர்வலைகள ஏற்படுத்த அதன் தாக்கம் காரணமா டெப்பை ஓரங்கட்டியது டிஸ்னி நிறுவனம்.. காரணம் அமெரிக்காவை பொறுத்த வர குடும்ப வன்முறை பெருங்குற்றமா பார்க்கப்படுது.. பட வாய்ப்புகள் பறிபோய், பேரும் டெமேஜ் ஆனதுல டென்ஷனான ஜானி, ஆம்பெர் மேல மான நஷ்ட வழக்கு போட, ஒட்டு மொத்த உலகமும் இவங்க வழக்க லைவ்ல பாத்து உச்சுக்கொட்டிச்சு...

வழக்கு நடந்துட்டு இருக்கப்போவே ஜானி டெப்புக்கு ஆதரவு ஒரு பக்கம் பெருக, இறுதி தீர்ப்பும் அவருக்கு சாதகமாகவே வந்துச்சு... இதன் தொடர்ச்சியா எங்களுக்கு டெப் தான்டா எப்பவும் ஜாக் ஸ்பேரோனு கொடி பிடிக்க தொடங்கியதும் இப்ப வேற வழியே இல்லாம இறங்கி வந்துருக்கு டிஸ்னி நிறுவனம்... மீண்டும் திரையில ஜேக் ஸ்பேரோவா தரிசனம் கொடுப்பாறா ஜானி டெப்னு பொறுத்திருந்து தான் பாக்கனும்...


Next Story

மேலும் செய்திகள்