சென்னை டூ ஹாங்காங்.. வெளியான முக்கிய அறிவிப்பு

x

சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு விமான சேவைகள் முடக்கப்பட்டன. இதன் பின்னர் மீண்டும் விமான சேவை படிப்படியாக இயங்க தொடங்கியது. இந்நிலையில், ஹாங்காங்- சென்னை இடையே இயக்கப்பட்டு வந்த கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான சேவை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி, இன்று ஹாங்காங்கில் இருந்து 103 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் சென்னை வந்தடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்