கனடாவில் இந்திய வம்சாவளியை கொடூரமாக கொன்ற சிறுவன்.. உள்ளேயே இருந்து வினை வைத்த இன்னொரு அரக்கன்

x

தமிழகம் முழுவதும் எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தெரிவிக்க, தமிழக அரசுக்கு ஏப்ரல் வரை கூடுதல் அவகாசம் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் நிசார் அஹமதுக்கு பதிலாக, மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவனை நீதிமன்றத்துக்கு உதவியாக நியமித்து உத்தரவிட்டனர்.

இதனிடையே விசாரணையின் போது, அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்குகளின் விவரங்களை சேகரித்துள்ளதாகவும், மற்ற வழக்குகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதால், அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்