கண்மூடித்தனமாக வெடிக்கும் போர்-மடியும் உயிர்கள்.. சாம்பலாகும் காசா..-ஏமாற்றத்தை கொடுத்த இந்தியா

x

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், அதில் வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது...

இஸ்ரேலில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் கண்டனத்திற்கு உரியது என்று தெரிவித்த ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி யோஜ்னா படேல், பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க அழைப்பு விடுத்தார். பயங்கரவாதத்திற்கு எல்லையோ, இனமோ, தேசமோ தெரியாது என்றும், பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்த உலகம் விலை போகக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்... மேலும், வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அனைவரும் ஒன்றுபட்டு பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர், காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதை இந்தியா வரவேற்பதாகத் தெரிவித்தார். சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்...


Next Story

மேலும் செய்திகள்