புதினை சீண்டிய ஜோ பைடன்.. ஒரே கையெழுத்தால் தீவிரமாகும் போர் - ரூ.7 லட்சம் கோடியை இறக்கும் US

x

உக்ரைன், இஸ்ரேல் மற்றும் தைவான் ஆகிய நாடுகளுக்கு நிதி உதவித் தொகை வழங்குவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

உக்ரைனுக்கு மிகவும் அவசியமான இராணுவ உதவிகளை அங்கீகரிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்ட பைடன், அமெரிக்கா சில மணி நேரங்களில் உக்ரைனுக்கு புதிய உதவிகளை அனுப்பத் துவங்கும் என தெரிவித்தார். உக்ரைன், இஸ்ரேல் - தைவானுக்கான உதவி மற்றும் அமெரிக்காவில் TikTok ஐ தடை செய்வதற்கான நடவடிக்கை ஆகியவற்றிற்காக 7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது... உக்ரைனின் மிகப்பெரிய ஆதரவாளராக இருந்து வரும் அமெரிக்கா கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உக்ரைனுக்கு பெரிய அளவிலான நிதியுதவிக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில், நவம்பரில் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக போருக்கு நிதியளிப்பது சர்ச்சையாக மாறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்