இஸ்ரேலுக்கு வார்னிங் கொடுத்த பைடன்... உக்கிரமான போரில் திடீர் திருப்பம்

x

ஹமாஸ் தான் பாலஸ்தீனியர்கள் என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது என்றும், காசாவை மீண்டும் இஸ்ரேல் ஆக்கிரமிக்க நினைத்தால் அது மிகப்பெரிய தவறு எனவும் குறிப்பிட்டார். ஆனாலும் அங்கிருக்கும் தீவிரவாதிகளை வெளியேற்றுவது என்பது அவசியமான ஒன்று என பைடன் வலியுறுத்தினார். ஹமாஸ் படை ஒரு கோழைக் கூட்டம் என சாடிய பைடன், அவர்கள் பொதுமக்களின் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார்... அவர்கள் தங்கள் தலைமையகங்களை பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் வைத்திருப்பதாகக் கூறிய பைடன், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்க இஸ்ரேல் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இஸ்ரேலை விமர்சிக்க மறுத்த பைடன், இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என குறிப்பிட்டார்.

போர் விதிகளின் கீழ் இஸ்ரேல் செயல்படும் என்றும், காசா மக்களுக்கு மருந்துகள், உணவு, நீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என தான் நம்புவதாகவும் பைடன் குறிப்பிட்டார்... ஹமாஸ் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதை ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்த அவர், சுதந்திர பாலஸ்தீனம் வேண்டும் எனவும் ஆதரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்