மோடிக்காக பறந்து வரும் பைடன் - ஜி 20 மாநாட்டில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்

x

கொரோனா நெகடிவ் என மீண்டும் வந்ததை அடுத்து திட்டமிட்டபடி டெல்லி ஜி-20 மாநாட்டில் பங்கேற்க உள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வரும் வெள்ளிக்கிழமை பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார்.அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அதிபர் பைடனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நெகடிவ் என வந்தது. எனினும், ஒரு வாரத்திற்கு மருத்துவர் கண்காணிப்பு அவசியம் என கூறப்பட்டது. இதனால் டெல்லியில் வரும் 9ம் தேதி தொடங்கும் ஜி-20 மாநாட்டில் பைடன் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே, பைடனுக்கு மீண்டும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன், ஜி-20 மாநாட்டில் அதிபர் பைடன் திட்டமிட்டபடி கலந்துகொள்ள இருப்பதாகவும், இதற்காக வியாழக்கிழமை டெல்லி பயணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மறுநாள் வெள்ளிக்கிழமை பிரதமர் மோடியுடன் நடைபெறும் இருதரப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். அதன்பின்னர் 9, 10ம் தேதிகளில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் பைடன் பங்கேற்க இருப்பதாக ஜேக் சுல்லிவன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்