"மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்" மகுடம் சூடிய 60 வயது அழகி

x

60 வயது அழகி ஒருவர் "மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்" பட்டம் சூடி வரலாறு படைத்துள்ளார்... இளம்பெண்களே வெற்றி வாகை சூடி வந்த இந்த அழகிப் போட்டி வரலாற்றில், பட்டத்தை வென்ற முதல் 60 வயது பெண்மணி என்ற சாதனையை வழக்கறிஞரும் பத்திரிகையாளருமான அலஜெந்திரா படைத்துள்ளார்... அடுத்ததாக அலஜெந்திரா மிஸ் யுனிவர்ஸ் அர்ஜென்டினா கிரீடத்தை சூட உறுதியாக உழைத்து வருகிறார்... மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி மெக்சிகோவில் வரும் செப்டம்பர் 24ல் நடைபெற உள்ள நிலையில், உலக நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பட்டத்தை வெல்ல போட்டி போடுவர்... அவர்களுக்கு மத்தியில் 60 வயது அலஜெந்திரா களமிறங்குவது வயது என்பது எதுவுமில்லை...வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் நிரூபிக்கும்.


Next Story

மேலும் செய்திகள்