திடீரென பாய்ந்த ட்ரோன்! - கதறி துடித்த 3 அமெரிக்க வீரர்கள்..

x

திடீரென பாய்ந்த ட்ரோன்! - கதறி துடித்த 3 அமெரிக்க வீரர்கள்..

ஜோர்டானில் அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

சிரிய எல்லைக்கு அருகில் ஜோர்டானின் வடகிழக்கு பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படைகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது... இதற்கு ஈரான் ஆதரவு குழுக்கள் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்... மேலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இத்தாக்குதலில் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அக்டோபரில் இஸ்ரேல் - காசா போர் வெடித்ததில் இருந்து அமெரிக்க படைகளுக்கு எதிராக மத்திய கிழக்கில் எதிரி படைகளால் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவென கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்