மனித அழிவின் புது தொடக்கம்.. "கருணையே கிடையாது" நசுக்கி கொல்லும் ரோபோக்கள்.. உதாரணமான தென்கொரியா

x

ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பிரச்சனையாக பார்க்கும் நாடுகளுக்கு மத்தியில் அதனை பெரும் தீர்வாக பார்க்கும் தேசம்தான் தென் கொரியா.

அதனால் தான் மேற்குலக நாடுகளை விடவும்... ரோபோட்டிக்ஸில் கலாச்சார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு கொண்ட தேசமாக தென் கொரியா அறியப்படுகிறது.

கிட்டத்தட்ட அலாவுதீன் அற்புத விளக்கு போல்... தங்களின் பணி சுமையை குறைக்கும் சேவகனாக ரோபோக்களை பார்க்கும் கொரிய மக்கள் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ஹியூமனாய்டு ரோபோக்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

'சிட்டி' அளவிற்கு சுட்டியாக இல்லாவிட்டாலும்... தனது நாட்டின் ராணுவத் துறை முதல் அறுவை சிகிச்சை கட்டிடக்கலை, விவசாயம் மற்றும் சமையல் என அனைத்து துறையிலும் ரோபோக்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது, தென்கொரியா.

சர்வதேச ரோபோடிக்ஸ் கூட்டமைப்பின் தகவலின்படி,

தென்கொரியாவின் உற்பத்தி துறையில் பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு 932 ரோபோக்கள் வேலை செய்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

உலகிலேயே ரோபோக்களின் பயன்பாடு அடர்த்தியாக உள்ள தேசமான தென்கொரியா, சீனாவிற்கு அடுத்த படியாக அதிகளவில் உலக நாடுகளுக்கு ரோபோக்களை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் உள்ளது.

இப்படிப்பட்ட தேசத்தில் தான் தற்போது பெரும் அதிர்ச்சிகர நிகழ்வு ஒன்று அரங்கேறி உள்ளது.

தென் கொரியாவின் தெற்கு Gyeongsang மாகாணத்தில்

உள்ள ஒரு விவசாய தொழிற்சாலையில், மிளகு பெட்டிகளை pack செய்து அனுப்ப உதவும்... ரோபோட்டிக் கைகள் திடீரென பழுதடைந்துள்ளன.

இதனால் ரோபோக்களின் சென்சாரை சரி பார்ப்பதற்காக அதன் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து ஊழியர் ஒருவர் அங்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.

சரியாக வேலை செய்யாத பழுதடைந்த ரோபோவின் சென்சாரை அவர் சரி பார்த்துக் கொண்டிருந்தபோது... மிளகு பெட்டிகளை தட்டுகள் மீது எடுத்து வைத்துக் கொண்டிருந்த மற்றொரு ரோபோ... அவரையும் தவறுதலாக மிளகுப் பெட்டி என நினைத்து, அவரின் முகம் மற்றும் நெஞ்சை நசுக்கியுள்ளது.

அங்கிருந்த சக ஊழியர்கள் ஒரு வழியாக அந்த ஊழியரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இதே போல் ஆட்டோ மொபைல் பாகங்கள் உற்பத்தி ஆலையில் 50 வயது மதிக்கத்தக்க நபரை பொருளென தவறுதலாக நினைத்து ரோபோ தாக்கிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், மிளகு பெட்டிக்கும் மனிதருக்கும் வித்தியாசம் தெரியாததால் ரோபோவின் தாக்குதலுக்கு ஆளாகி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொழில்நுட்பத் துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்