நிலவில் மோதி வெடிக்கப்போகும் ஏவுகணை - 7 ஆண்டுகளாக விண்ணில் வட்டமடிக்கும் ராக்கெட்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் நிலவில் மோதி வெடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்..
x
வானிலை நிகழ்வுகளை ஆராய்ச்சி செய்வதற்காக 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்பிய இந்த ஏவுகணை தான் FALCOLN 9..பூமிக்கு திரும்ப தேவையான எரிபொருள் இல்லாததால், 7 ஆண்டுகளாக விண்ணிலேயே வட்டமடித்து வரும் இந்த ஏவுகணை,பூமி, நிலவு, சூரியன் என பலதரப்பட்ட ஈர்ப்பு விசைகளின் ஆதிக்கத்தால் விண்ணில் தடுமாறி கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள்  கூறியிருந்தனர்.இந்த FALCOLN 9 ஏவுகணை நிலவில் மோத உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.வருகிற மார்ச் 4ஆம் தேதி விண்வெளி நிலவில் மோதி வெடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.இந்த ஏவுகணையின் மொத்த எடை சுமார் 4 டன் எனவும், மணிக்கு 9 ஆயிரத்து 290 கிலோ மீட்டர் வேகத்தில் நிலவின் பரப்பில் மோதும் எனவும் கூறப்பட்டுள்ளது.ஒரு ராக்கெட் கட்டுப்பாடின்றி நிலவில் மோத உள்ளது இதுவே முதல் முறை என கூறியுள்ள ஆராய்ச்சியாளர்கள், இதன் பாதிப்பு பெரியளவில் இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.இந்த சூழலில் நிலவை ஆராய்ச்சி செய்து வரும் சந்திரயான் இரண்டு மற்றும் நாசாவின் LRO விண்கலங்கள் நிலவில் ஃபால்கன் ராக்கெட் மோதும் நிகழ்வை பதிவு செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்