தென் ஆப்ரிக்காவில் மும்மடங்கு அதிகமான கொரோனா பரவல்

ஒமிக்ரான் ரக வைரஸ் முதன் முதலில் தோன்றிய தென் ஆப்பரிக்காவில், தினசரி தொற்றுதலின் அளவு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
x
வீரியம் மிகுந்த உருமாறிய கொரோனா வைரஸ் ரகமான ஒமிக்ரான், நவம்பர் 24இல், தென் ஆப்பரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்டது.  


இதைத் தொடர்ந்து தென் ஆப்பரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து ஐரோப்பியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


தென் ஆப்பரிக்காவில், நவம்பர் 24இல் கொரொனா தொற்றுதலின் தினசரி அளவு 
1275ஆக பதிவானது. 


நவம்பர் 25இல் இது 2465ஆக அதிகரித்தது. நவம்பர் 26இல் 2828ஆகவும், நவம்பர் 27இல் 3220ஆகவும் அதிகரித்தது. நவம்பர் 28இல் 2858ஆக சற்று குறைந்தது. 


நவம்பர் 29இல் 2273ஆக இருந்த தினசரி தொற்றுதல்  நவம்பர் 30இல் 4373ஆக இரட்டிப்பானது. டிசம்பர் 1இல் இது மூன்று மடங்கு அதிகரித்து, 8561ஆக அதிகரித்துள்ளது. 


தற்போது தென் ஆப்பரிக்காவில் கொரோனா பாதிப்பிற்கு சிசிக்கை பெறுபவர் எண்ணிக்கை 36,600ஆக உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்