"ஒமிக்ரான்" பெயருக்கு பின் சீன அதிபரா?

சீன அதிபரின் பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக புதிய வகை கொரோனா வைரஸ்க்கு ஒமிக்ரான் என் பெயரிடப்பட்டுள்ளது.
x
சீன அதிபரின் பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக புதிய வகை கொரோனா வைரஸ்க்கு ஒமிக்ரான் என் பெயரிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஒவ்வொரு முறையும் உருமாறும் போதும், அதற்கு கிரேக்க அகர வரிசையில் உலக சுகாதார நிறுவனம் பெயர் வைத்து வருகிறது.

ALPHA, BETA, GAMMA, DELTA என கிரேக்க அகர வார்த்தைகளில் உருமாறிய தொற்று பெயர் வைக்கப்பட்டது.

அண்மையில் தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அதற்கு, அகர வரிசையின் படி NU என்ற பெயரே வைக்கப்படும் என பேசப்பட்டது

எனினும், அதனை ஆங்கில வார்த்தையான NEW என உச்சரிக்கப்படும் என்பதால், அந்த பெயர் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அகர வரிசையில் அடுத்ததாக உள்ள XI என்ற வார்த்தையும் புறக்கணிக்கப்பட்டு, 15வது கிரேக்க அகர வார்த்தையான ஒமிக்ரான் என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியது. சீன அதிபரின் பெயரும் XI என இருப்பதோடு, 

ஏற்கனவே சீனாவில் இருந்து தொற்று பரவியது என குற்றம்சாட்டப்பட்டு வருவதால், அந்த வார்த்தையை உலக சுகாதார நிறுவனம் புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்